ரூ.2 கோடியே 30 லட்சத்து 33 ஆயிரத்து 141 வசூலானது.

44

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஜூன் மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.2 கோடியே 30 லட்சத்து 33 ஆயிரத்து 141 வசூலானது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் இரு நாட்கள் உண்டியல் எண்ணிக்கை நடக்கிறது. இந்த மாதம் கடந்த 14ம் தேதியும் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இணை ஆணையர் பாரதி தலைமையில், தூத்துக்குடி உதவி ஆணையர் ரோஷாலி சுமதா, திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் செல்வராஜ், முதுநிலை கணக்கு அலுவலர் மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் 150 கோயில் பணியாளர்கள் 150 சிவகாசி உழவார பணிக்குழு வினர் என மொத்தம் 300 உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். இதில் கடந்த 14ம் தேதி உண்டியல் எண்ணப்பட்டதில் ஒரு கோடியே 60 லட்சத்து 49 ஆயிரத்து 823 ரூபாயும், வைகாசி விசாக உண்டியலில் 19 ஆயிரத்து 169 ரூபாயும் வசூலானது. இந்நிலையில் நேற்று உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 61 லட்சத்து 365ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ. 23 ஆயிரத்து 424, கோசாலை உண்டியலில் ரூ. 52 ஆயிரத்து 523, மேல கோபுர திருப்பணி உண்டியலில் ரூ. ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 191, அன்னதான உண்டியலில் ரூ. 5 லட்சத்து 90 ஆயிரத்து 646 வசூலானது. இரு நாட்கள் நடந்த உண்டியலில் மொத்தம் ரூ. 2 கோடியே 30 லட்சத்து 33 ஆயிரத்து 141 ரூபாய் வசூலானது. இதில் தங்கம் 2720 கிராம், வெள்ளி 21 ஆயிரத்து 482 கிராம் கிடைத்தது. வெளிநாட்டு கரன்சிகள் 418 உண்டியலில் வசூலானது.

LEAVE A REPLY