பிளாஸ்டிக்  மாசுவை முறியடிப்போம்

63
பிளாஸ்டிக்
தூத்துக்குடி  மாவட்டம், தமிழ்நாடு வனத்துறை, மன்னார்  வளைகுடா உயிர்க்கோள காப்பகம்  சார்பாக  “பிளாஸ்டிக்  மாசுவை முறியடிப்போம்”
(BEAT THE PLASTIC POLLUTION) என்ற தலைப்பில்   உலக சுற்றுச்சூழல்  தின விழா –   சிறப்பிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி  மாவட்டம் , தரவைக்குளம் கடலோரப்  பகுதியை  தூய்மை செய்யும்  பணி நடைபெற்றது. இப்பணியினை தூத்துக்குடி வனச்சரக அலுவலர் ரா. ரகுவரன் துவக்கி வைத்து சுற்றுசூழல் மற்றும் கடல் மாசு அடைவதில் மக்களின் பங்கு மற்றும் பிளாஸ்டிக் உபயோக படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் பற்றி கூறப்பட்டது. முன்னதாக பள்ளியில் இருந்து கடற்கரைக்கு பேரணியாக சென்று கடற்கரை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் சேகரம் செய்தனர். தூய்மை பணியில் தரவைக்குளம் அரசு மேல்நிலை பள்ளி  மாணவர்கள் மற்றும்  கிராம மக்கள் 130 நபர்கள் கலந்து கொண்டனர்.  மாலை வெள்ளப்பட்டி கடற்கரையில் பிளாஷ்டிக்க்கை அகற்றும் பணி  நடைபெற்றது. விழாவை துணை மண்டல அலுவலர்கள் மதன்குமார், அன்பழகன் மற்றும் திட்டகளபணியாளர் டிக்ரூஸ், சுகந்தி ஏற்பாடு செய்ய்திருந்தார்.

LEAVE A REPLY