கோவில்பட்டியில் நடைபெற்ற சித்தர் தமிழ் மாநாட்டில் விளம்பரத்துறை அமைச்சர் திருவள்ளுவர் படத்தினை திறந்து வைத்தார்

20
கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ வேல்ஸ் மஹாலில் சித்தர் தமிழ் மாநாடு கடந்த 14.05.2018 அன்று தொடங்கி இன்று (16.05.2018) வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவு நாளான இன்று மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்ப10ர் செ.ராஜூ அவர்கள் பங்கேற்று திருவள்ளுவர் திருவுருப்படத்தினை திறந்து வைத்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற சித்தர் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி தமிழர் வாழ்வியல் நெறி பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசிய போது தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் 2011ஆண்டு முதல்; தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மி;குந்த அக்கறையுடன் மருத்துவதுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிலும் சித்த மருத்துவத்திற்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி காட்டினார்கள்.
சித்த மருத்துவம் என்பது மிகவும் தனிச்சிறப்பு மிக்க ஒன்றாகும். உலகில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாத மருத்துவம் என்றால் அது சித்த மருத்துவம் மட்டுமே. தமிழ்நாடு அரசு சித்த மருத்துவத்தின் மேன்மையை உணர்ந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவத்திற்கென தனி பிரிவையே ஏற்படுத்தியுள்ளது. நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பான முறையில் சித்த மருத்துவ பிரிவு இயங்கி வருகிறது..இந்த மாநாட்டில் மருத்துவ குணம் கொண்ட பல்வேறு மூலிகை செடிகள் வேர்கள் விதைகள் மற்றும் கிழங்கு வகைகள் ஆகியவற்றின் பயன்கள் குறித்து இளைய தலைமுறையினர்; பயன்பெறும் வகையில் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. சித்தர் தமிழின் மேன்மை விஞ்ஞானம் வாழ்வியல் உயிர் மெய் கோட்பாடு மற்றும் பண்பாட்டு உணவுப் பழக்க நெறிமுறைகள் குறித்து வருங்கால சந்ததினருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தின் மேன்மையை உணர்ந்து இளைய சமுதாயத்தினர் அது குறித்த ஆழ்ந்த அறிவை பெறவேண்டும்.
எதிர் வரும் 29ம் தேதி நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மானிய கோரிக்கையின் பொது இம்மாநாட்;டில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்ப10ர் செ.ராஜூ அவர்கள் கூறினார்கள்.
இம்மாநாட்டில் சித்த மருத்துவ ஆராய்;ச்சியாளர் திரு.டி.காந்திராஜ் அவர்கள் வரவேற்புரையாற்ற தமிழ்நாடு சித்தா வர்ம நிறுவனத்தலைவர் திரு.அரசு ராஜா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். பல்வேறு தமிழ் அறிஞர்கள் மற்றும் சித்த மருத்துவ பேராசியர்கள் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

வெளியீடு; செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தூத்துக்குடி மாவட்டம்.

LEAVE A REPLY