அண்ணா பல்கலைக்கழக மாணாக்கர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டு.

17
பழனிசாமி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை இன்று (16.5.2018) தலைமைச் செயலகத்தில், அரசு பொறியியல் கல்லுhரிகள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பில் முதன்மை பெற்று விளங்கும் மாணாக்கர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தொழிற் பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் தொழிற் பயிற்சி பெறுவதற்காக செல்லவுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 50 மாணாக்கர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் 49 மாணாக்கர்கள், என மொத்தம் 99 மாணாக்கர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 99 மாணாக்கர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கடந்த 23.8.2016 அன்று சட்டப்பேரவை விதி எண் 110 கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்வதைப் போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திடும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும்
மாணாக்கர்களுக்கும் 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெறும் பொருட்டு அயல்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அறிவித்தார்கள்.
இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணாக்கர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 15 நாட்கள் தொழிற் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு, தங்கள் அறிவுத் திறனை உலகளவில் மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியினை அறியவும், அவர்களின் ஆய்வு திறனை வளர்க்கவும் வழிவகை ஏற்படும்.
இத்திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 50 மாணாக்கர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணாக்கர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 49 மாணாக்கர்களும், என மொத்தம் 99 மாணாக்கர்கள்
தேர்வு செய்யப்பட்டு, இம்மாணவர்களுக்கு 15 நாட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழிற் பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், 2017-18ஆம் கல்வி ஆண்டில், ஆநஉhயniஉயட நுபேiநேநசiபே, நுடநஉவசiஉயட யனே நுடநஉவசடிniஉள நுபேiநேநசiபே, ஊடிஅயீரவநச ளுஉநைnஉந நுபேiநேநசiபே, ஆநவயடடரசபல நுபேiநேநசiபே, ஞசடினரஉவiடிn கூநஉhnடிடடிபல யனே ஐகேடிசஅயவiடிn கூநஉhnடிடடிபல பாடப்பிரிவுகளைச் சார்ந்த 61 மாணாக்கர்கள் ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் உள்ள ளுறinரெசநே ருniஎநசளவைல டிக கூநஉhnடிடடிபல -ல் 19.5.2018 முதல் 2.6.2018 வரை தொழிற் பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
ஊiஎடை நுபேiநேநசiபே யனே க்ஷ.ஹசஉh பாடப்பிரிவுகளைச் சார்ந்த 14 மாணாக்கர்கள் ஜெர்மன் நாட்டில் உள்ள டுநibnணை ருniஎநசளவையவ, ழயnnடிஎநச, ழுநசஅயலே-ல் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற் பயிற்சி வகுப்பில் ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

நுடநஉவசiஉயட யனே நுடநஉவசடிniஉள நுபேiநேநசiபே, நுடநஉவசடிniஉள யனே ஐளேவசரஅநவேயவiடிn கூநஉhnடிடடிபல பாடப்பிரிவுகளைச் சார்ந்த 24 மாணாக்கர்கள் ஜப்பான் நாட்டில் உள்ள லுடிhடிhயஅய சூயவiடியேட ருniஎநசளவைல-ல் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற் பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அதன்படி, தேர்தெடுக்கப்பட்ட அரசு பொறியியல் கல்லூரியில் பயிலும்
50 மாணாக்கர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் 49 மாணாக்கர்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் தொழிற் பயிற்சி பெறுவதற்காக செல்வதற்கு முன்பு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தெரிவு செய்யப்பட்ட 99 மாணாக்கர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர்
திரு.கே.பி. அன்பழகன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திரு.சுனில் பாலீவால், இ.ஆ.ப., தொழில்நுட்ப கல்வி இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) திரு.கே. விவேகானந்தன், இ.ஆ.ப., அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எம்.கே. சுரப்பா, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் எஸ். கணேசன், அண்ணா பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு விவகாரத் துறை இயக்குநர் திரு.என். ராஜேந்திரன், ஆஸ்திரேலியா நாட்டின் ளுறinரெசநே ருniஎநசளவைல டிக கூநஉhnடிடடிபல ஒருங்கிணைப்பாளர் திரு.விஜய் சுப்பிரமணியன், ஆஸ்திரேலியா வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணையக் குழு தலைவர் திரு.அடில் முகமது, ஆஸ்திரேலியா வணிகம் மற்றும் வர்த்தக ஆணையர் திரு.முனிஷ் சர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY