ராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்

16
ராயுடு

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘வழிகாட்டி’யாக அம்பாத்தி ராயுடு திகழ்கிறார். 500 ரன்களை கடந்துள்ளார். சேசிங், இலக்கை நிர்ணயித்தல் என்று இருதரப்பிலும் சிறப்பாக விளங்குகிறார்.

இந்நிலையில் தோனி, ராயுடு பற்றி இதயபூர்வமாகப் புகழ்ந்துள்ளது பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் இணையதளச் செய்தி வருமாறு:

இந்த ஐபிஎல் 2018 தொடருக்கு முன்பாகவே கூட நான் ராயுடுவுக்காக இடம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் நான் அவரைத் தரநிலையில் உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறேன்.

பெரும்பாலான் அணிகள் ஸ்பின்னர்களைக் கொண்டு தொடக்க வீரர்களை கட்டுப்படுத்த நினைக்கும், ஆனால் ராயுடு ஸ்பின், வேகப்பந்து வீச்சு இரண்டிலும் சிறந்து விளங்குகிறார்.

அவரைப்பார்த்தால் பெரிய ஹிட்டர் போல் தெரியவில்லை. ஆனால் பெரிய ஷாட்களை ஆடும்போது ஒவ்வொரு முறையும் எல்லைக்கோட்டைத் தாண்டி பந்துகள் பறக்கின்றன.

என்னுடைய திட்டம் ராயுடுவை தொடக்க வீரராக்கி, கேதார் ஜாதவ் உடற்தகுதி பெற்றால் அவரை 4, 5 நிலையில் இறக்கத் திட்டம்.

எவ்வளவு ஓவர்கள் மீதமுள்ளன என்பதைப் பொறுத்து 4ம் நிலையில் இறக்கும் வீரரை முடிவு செய்கிறோம்.

இவ்வாறு அந்த செய்தியில் தோனியை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY