5 காங்., எம்.எல்.ஏ.,க்கள் ‘எஸ்கேப்’.

97
கர்நாடக

பெங்களூரு : பரபரப்பான சூழலில் கர்நாடக அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்பட்டு வருகிறது. அடுத்து ஆட்சி அமைக்க காங்., கூட்டணியுடன் மதசார்பற்ற ஜனதா தளமும், பா.ஜ., ஒருபுறமும் தீவீரம் காட்டி வருகின்றன. இதற்காக தங்களது கட்சி எம்எல்ஏ.,க்களை கூட்டி பா.ஜ., காங்., மஜத ஆகிய கட்சிகள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மஜத.,வை சேர்ந்த 2 எம்எம்ஏ.,க்களும், காங்., ஐ சேர்ந்த 4 எம்எல்ஏ.,க்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. பா.ஜ., ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏ.,க்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.,வுக்கு எதிராக புதிதாக கூட்டணி அமைத்துள்ள காங்., 4 மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் மாயமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை கட்சி மேலிடத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 78 பேரில் 5 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதில், 3 பேர் மதசார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்தும், 2 பேர் பா.ஜ.,விலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள்.

LEAVE A REPLY