சூர்யா – கே.வி.ஆனந்த் படத்தில் மோகன்லால்

25
மோகன்லால்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில், முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.

கே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களில் ஹீரோவாக நடித்தார் சூர்யா. தற்போது மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறார். நேசன் இயக்கத்தில் வெளியான ‘ஜில்லா’ படத்தில், ஏற்கெனவே விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துவரும் இந்தப் படத்தில், ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

‘என்.ஜி.கே.’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறது. இந்த வருட தீபாவளிக்குப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY