ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்கோவில் சித்திரை பிரம்மோற்ச்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது!!

28
ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்கோயில் சித்திரை பிரம்மோற்ச்சவம்  கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் முதலாவது திருப்பதி ஸ்ரீவைகுண்டம் சூரியன் ஸ்தலமாகும்.  108 வைணவதிருப்பதிகளில் ஒன்றான  கள்ளபிரான்சுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை  முன்னிட்டு  நேற்று முன்தினம் மாலையில் திருமுளைசாத்துதல், மிருத்ஸங்கிரகணம், இரவு தங்க தோளுகிளியானில் சேனைமுதல்வர் புறப்பாடு நடைபெற்றது.
நேற்று காலை 1ம் திருவிழாவை முன்னிட்டு  காலை  4 மணிக்கு விஸ்வரூபம், காலை 5 மணிக்கு திருமஞ்சணம், காலை 6.45 மணிக்கு கொடி பட்டம் சுற்றிவருதலும், 7மணிக்கு கொடி மண்டபத்திற்க்கு எழுந்தருளினார் காலை 8,40மணிக்கு வேதபாராயணம் முழங்க மிதுன லக்கினத்தில்  கொடியேற்றம் நடந்தது .
பின்னர் தேர்கால் நடுதல், 11மணிக்கு தங்க மசகிரியில் கண்ணாடி மண்டபத்தில் வைத்து திருமஞ்சனமும் தீர்த்த விநியோக கோஷ்டியும். மாலை 7மணிக்கு தங்கதோளுக்கினியானில்   சுவாமி கள்ளபிரான் வீதி புறப்பாடு நடைபெற்றது.
வருகிற 9ந்தேதி ஜந்தாம் திருவிழாவை முன்னிட்டு காலை 9,30சுவாமிகள்ளர்பிரான், காய்சினவேந்தபெருமாள், எம்இடர்கடிவான்,ஆகியோர்க்கு சுவாமி நம்ஆழ்வார் மங்களாசாசனமும் நடக்கிறது. இரவு 9மணிக்கு 4கருடவாகனத்தில்    சுவாமிகள்ளர்பிரான், பொலிந்துநின்றபிரான், காய்சினவேந்தபெருமாள், ஸ்ரீவிஜயாசனப் பெருமாள் குடவரை பெருவாயில் அன்னவாகனத்தில் அமர்ந்து இருக்கும் நம்மாழ்வாருக்கு எதிர்சேவையும் விதி புறப்பாடும் நடக்கிறது.
வருகிற 13ந்தேதி ஞாயிற்றுகிழமை காலையில் சுவாமி கள்ளர்பிரான் காலை 5.30மணிக்கு சுவாமி கள்ளபிரான்       கொடிமரம் சுற்றி ஏழுந்தருளுகிறார் பின்னர் 6மணிக்குமேல் 7மணிக்கு மேஷ லக்கினத்தில் திருதேரில் ஏழுந்தருளி 8,30மணிக்கு திருதேர் வடம்பிடித்தல் நடக்கிறது.
விழாவில் நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஆய்வாளர் ரவீந்திரன் ஸலத்தார்கள் ஸ்ரீனிவாசன், வெங்கடாச்சாரி, சினிவாசன்,தேவராஜன் பட்டர்கள், நாராயணன், ரமேஷ், ராமானுசம், சீனிவாசன், ஆகியோர் ஏற்ப்பாடுகளை செய்து வருகிறார்கள்

LEAVE A REPLY