வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு திரு.கடம்பூர்.செ.ராஜூ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

37
சுந்தரலிங்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரி வீரர் சுந்தரலிங்கம் மணிமண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப்போராட்ட வீரர் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த நாள் விழாவில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ அவர்கள் அன்னாரது திருவுருவச்சிலைக்கு இன்று (16.4.2018) மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சுந்தரலிங்கம்
பின்னர் சமூக நலத்துறையின் சார்பில் 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ.25 ஆயிரம் நிதியுதவியும் 14 பேருக்கு தலா 8 கிராம் தங்கத்துடன் ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் என ரூ.1050000/- க்கான காசோலையினையும் மகளிர் திட்டத்தின் மூலம் 18 சுய உதவி குழுக்களுக்கு சுழல்நிதியாக தலா ரூ. 10 ஆயிரம் என ரூ.1 இலட்சத்து 80 ஆயிரத்துக்கான காசோலையினையும் பணிபுரியும் பெண்கள் 10 பேருக்கு தலா ரூ.25000/- மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனமும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 40 பயனாளிகளுக்கு விபத்து மற்றும் இறப்பு உதவித்தொகைக்கான ரூ.1015000ஃ- க்கான காசோலையினையும் 14 பயனாளிகளுக்கு ரூ.322000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ.2817000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர்.செ.ராஜூ அவர்கள் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்காற்றிய தியாகிகள் நிறைந்த மாவட்டம் ஆகும். சுதேசி கப்பலோட்டிய வ.உ.சி அவர்களும் தனது பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையைத் தூண்டிய மகாகவிபாரதியாரும் இம்மாவட்டத்திற்கு சொந்தக்காரர்கள். இது போன்று வீரபாண்டிய கட்டபொம்மன் வீரன் வெள்ளையத்தேவன் வீரன் அழகுமுத்துக்கோன் போன்றார் வரிசையில் வீரன் சுந்தரலிங்கமும் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் வெள்ளையனை எதிர்த்து போரிட்டார். வீரத்தளபதி சுந்தரலிங்கம் தனது வீரவாளை உருவி நான் உயிரோடு இருக்கும்வரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை தகர்க்கவோ எதிரிகளை உள்ளே விடவோ ஒருபோதும் நடக்க விடமாட்டேன் என்று தனது வாளின் மீது சத்தியம் செய்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை காப்பதற்காகவே தன் உயிரை மாய்த்து வீரவரலாற்றில் இடம் பெற்றார். வீரன் சுந்தரலிங்கம் 248 ஆண்டுகளாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய வீரமும் சுதந்திரப்போராட்ட போர்குணமும் தியாகமும் ஆகும். போர் மூலமாகவும் அகிம்சை மூலமாகவும் வணிகத்தின் மூலமாகவும் எழுத்தின் மூலமாகவும் இப்படி பல விதமாக நம்மாவட்டத்தில் போராடி விடுதலையை நம் தலைவர்கள் பெற்;றுத்தந்துள்ளார்கள்.
இந்திய வரலாற்றில் முதல் இந்திய சுதந்திரப்போர் 1857-ல் வங்கதேசத்தில் ஆரம்பித்தது என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான முதல் சுதந்திரப்போர் 1799-லே பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் ஆரம்பித்து விட்டது. மேலும் இந்திய சுதந்திர வரலாற்றில் முதன் முதல் தற்கொலைப்படையினராய் உயிர்த்தியாகம் செய்தவர் வீரன் சுந்தரலிங்கம் ஆவார். வீரபாண்டிய கட்டபொம்மனும் வீரன் சுந்தரலிங்கமும் சாதி

LEAVE A REPLY