‘சரவெடி’ சாம்ஸன், ரன்களை வாரி வழங்கிய உமேஷ்: சுவாரஸ்ய தகவல்கள்

30
சாம்ஸன்

பெங்களூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்ஸ்மன் சஞ்சு சாம்ஸன் அதிரடியாக பேட் செய்து 45 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்தார். இதில் 10 சிக்ஸர்கள் அடங்கும். இதுதவிர சில சுவாரஸ்ய தகவல்களும் உள்ளன.

1. 11-வது ஐபிஎல் சீசனில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த 2-வது வீரர் சாம்ஸன். இதற்கு முன் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆன்ட்ரூ ரஸல் 11 சிக்ஸர் அடித்ததே அதிகபட்சமாகும்.

2. ஐபிஎல் போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த 2-வது இந்திய பேட்ஸ்மன் சஞ்சு சாம்ஸன். இவர் 10 சிக்ஸர்கள் அடித்தார். இதற்கு முன் கடந்த 2010ம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே வீரர் முரளி விஜய்11சிக்ஸர்கள் அடித்தார்.

3. 2018ம் ஆண்டு ஐபில் சீசனில் சாம்ஸின் 92 ரன்களே பேட்ஸ்மேன் ஒருவரின் அதிகபட்சமாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக ஜேஸன் ராய் 91 ரன்கள் சேர்த்திருந்தார்.

4. உமேஷ் யாதவின் கடைசி ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கினார். இதுதான் இந்த சீசனில் பந்துவீச்சாளர் ஒருவர் அதிகபட்சமாக வழங்கிய ரன்களாகும். இதற்கு முன் கடந்த 2017-ல் அசோக் டிண்டா மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 30ரன்களை ஒரே ஓவரில் வழங்கி இருந்தார்.

5. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி 5 ஓவர்களில் 88 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் ஒரு அணி சேர்த்த 2-வது அதிகபட்சமாகும். இதற்கு முன் கடந்த 2016ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி 112 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருக்கிறது.

6. 5-வது முறையாக உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 50 ரன்கள் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY