காவிரி பிரச்சினைக்காக 3-வது முறையாக திமுக தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு

21
கட்சி கூட்டம்

காவிரி பிரச்சினைக்காக திமுக தலைமையில் 3-வது முறை யாக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 1-ம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. இதில் திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 9 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 5-ம் தேதி முழு அடைப்பு நடந்தது.

2-வது முறையாக கடந்த 6-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புப் பயணம்,ஏப்.12-ம் தேதி சென்னை வந்த பிரதருக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கடந்த 13-ம் தேதி ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் பிரதமரை சந்திக்க நேரம் பெற்றுத் தருமாறும் மனு அளித்தனர்.

இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 9 கட்சித் தலைவர்க ளின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில் இன்று நடக்க உள்ளது. இதில், காவிரி பிரச்சினைக்கான அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக திமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியபோது, ‘‘மே 3-ம் தேதிக்குள் வரைவு திட்டத்தை சமர்ப்பிக்குமாறு மத் திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர் தல் மே 12-ம் தேதி நடப்பதால் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு கண்டிப்பாகத் தாக்கல் செய்யாது. மேலும் கால அவகாசத்தை கேட்கும். மே 3-ம் தேதி வரைவுத் திட்டத்தை சமர்பிக்க மத்திய அரசுக்கு நெருக் கடி கொடுக்கும் வகையில் போராட்டங்கள் நடத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்’’ என்றார்.

இன்று ஆர்ப்பாட்டம்

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகளின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. இதில் ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன், காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY