கணவருக்காக தயாரிப்பாளராக மாறிய நஸ்ரியா

30

கணவர் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறார் நஸ்ரியா.

நிவின் பாலி ஜோடியாக ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. அதன்பிறகு ‘ராஜா ராணி’, ‘நையாண்டி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஆகிய படங்களில் நடித்தார். மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசிலைத் திருமணம் செய்து கொண்டதால், நடிப்பில் இருந்து ஒதுங்கினார் நஸ்ரியா.

சிறிய இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கத்தில் நஸ்ரியா நடிப்பதாக கூறப்பட்டது. அவருடன் இணைந்து பிருத்வி ராஜ் மற்றும் பார்வதி ஆகியோரும் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கணவர் ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘அயுபிண்டே புத்தகம்’ படத்தைத் தயாரிக்கிறார் நஸ்ரியா. அமல் நீரத் இயக்கும் இந்தப் படத்தில், ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

LEAVE A REPLY