ஸ்டேட் வங்கியில் வேலை வேண்டுமா? – 9500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

159

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, புதிதாக 9,500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன், அதன் ஆறு துணை வங்கிகள் கடந்த ஆண்டு இணைந்தன. இதையடுத்து எஸ்பிஐ கிளைகள் மாற்றியமைக்கப்பட்டு, ஊழியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தானாக பதவி ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் பலர் பதவி ஓய்வு பெற்றுள்ளனர்.

இதனால் எஸ்பிஐ வங்கியில் ஏறக்குறைய 10 ஆயிரம் பணியிடங்கள் கடந்த ஆண்டில் காலியாகி உள்ளன. அதே சமயம் எஸ்பிஐ, நாட்டின் பல பகுதிகளிலும்,வெளிநாடுகளிலும் தனது வங்கி சேவையை விரிவாக்க திட்டமிட்டுள்ளது. எனவே கூடுதலாக 9,500 ஊழியர்களை புதிதாக பணியமர்த்த அந்த வங்கி திட்டமிட்டுள்ளது. இவர்களில் பெருமளவு இளநிலை உதவியாளர் பிரிவின் கீழ் பணியமர்த்தப்பட உள்ளனர்.

இதுகுறித்து எஸ்பிஐ வட்டாரங்கள் கூறுகையில் ‘‘காலியாகவுள்ள பணியிடங்களில் புதித நபர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் கூடுதலாக காலி பணியிடங்கள் உள்ளதால், அங்கு கூடுதலாக நபர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது’ என தெரிவித்துள்ளது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது. இரண்டாம் நிலை, மெயின் தேர்வு மே மாதம் நடைபெறுகிறது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க முடியும். பிப்ரவரி 10ம் தேதி கடைசி நாளாகும். 2013ம் ஆண்டுக்கு பிறகு எஸ்பிஐ அதிகஅளவில் ஆட்களை தேர்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY