22.7 C
Tuticorin
Friday, May 24, 2019
தமிழகம்

தமிழகம்

Featured posts

புதுச்சேரி ராஜ்நிவாஸில் முதல்முறையாக ஈஷா யோகா வகுப்பு மே 16-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 6 மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். ஈஷா யோகா மையம் சார்பில் பல்வேறு விதமான யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், கடந்த 25 ஆண்டுகளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்...
தமிழக அரசு ஊழியர்களுக்கு  3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.  9%ல் இருந்து 12% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.  ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு கணக்கிட்டு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் சிவன் கோயிலில்‌ கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற திருநங்கையின் திருமணம் உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவால் பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்த அருண்குமாரும் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையும் ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் அருண்குமாரும், ஸ்ரீஜாவும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த...
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் எச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.  தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு இடங்களில் தேர்தல் அன்று வாக்களித்த மக்களை சந்தித்து, அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கேட்டறிந்து கருத்துக்கணிப்பு...
தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு இடங்களில் தேர்தல் அன்று வாக்களித்த மக்களை சந்தித்து, அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கேட்டறிந்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. விபரம்:- ஈரோடு தொகுதி தருமபுரி தொகுதியை திமுக கூட்டணியான மதிமுக வெல்ல வாய்ப்பு உள்ளது.  இங்கு திமுக-காங்கிரஸ்...
சென்னை, சென்னையில் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் பேசியதாவது:- நான் காந்தியின் ரசிகன் ஒரு செருப்பு வந்து சேர்ந்துவிட்டது, இன்னொரு செருப்பும் வரும், எனக்கு அந்த அருகதை உண்டு. ஒரு முறை செருப்பு தவறி விழுந்ததால் தனது மற்றொரு செருப்பையும் கழற்றி வீசினார் காந்தி. ஒரு செருப்பு வந்து விட்டது. இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன். என் மீது செருப்பு...
அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஆர்.கே.,நகரில் இது போல அ.ம.மு.க.,வில் இருந்தபோது டோக்கன் கொடுத்து பழகியவர் செந்தில் பாலாஜி. இப்போது அரவக்குறிச்சியிலும், தி.மு.க., ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் என்பவர் மூலம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கன் தருகின்றனர். மாலை 3 மணிக்கு டோக்கனுக்கு பணம் தருவதாகவும், தேர்தல் முடிந்த பிறகு பணம்...
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பாரம்பரியம்மிக்க 123–வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கோடை சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டியில் மலர் கண்காட்சி 5...
தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் களத்தில் உள்ளார். நாளை மறுநாள் மீதமுள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து,...
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசியதாக அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வக்கீல் விஜயன் நேற்று மதுரை ஐகோர்ட்டில், நீதிபதி புகழேந்தி முன்பு கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி, போலீசாரால்...

LATEST NEWS

MUST READ