‘பத்மாவத்’ படத்துக்கு உ.பி., உத்தராகண்டில் தடையில்லை

0
34
பத்மாவத்

பலத்த சர்ச்சைக்குள்ளான ‘பத்மாவத்’ திரைப்படத்தை ஜனவரி 25-ம் தேதி அன்று வெளியிட உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் தடை விதிக்கப்படவில்லை.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ திரைப்படத்தை வெளியிட கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் குற்றம்சாட்டின. இதன் காரணமாக ‘பத்மாவதி’ திரைப்படம் வெளியாகும் தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில், யு/ஏ சான்றிதழ் பெற்ற ‘பத்மாவதி’ திரைப்படம் ‘பத்மாவத்’ என்ற பெயரில் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது.

இதுகுறித்துப் பேசிய உத்தரபிரதேச காவல்துஐ அதிகாரி, ”மாநிலத்தில் ‘பத்மாவத்’ படத்துக்குத் தடை விதிப்பது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

ஆனால் தடை விதிக்கக் கோரி நடத்தப்படும் போராட்டங்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பட வெளியீட்டின் போது தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்” என்றார்.

இதற்கிடையே கர்னி சேனா அமைப்பினர் உத்தராகண்ட் முதல்வர் த்ரிவேந்திர சிங்கைச் செவ்வாய்க்கிழமை அன்று டேராடூனில் சந்தித்து படத்துக்குத் தடை கோரியுள்ளனர்.

ஆனால் உத்தராகண்ட் அரசும் இதுவரை படத்தின் மீது எந்தத் தடையும் விதிக்கவில்லை.

LEAVE A REPLY