“ மோகன் சி.லாசரஸ் புத்தாண்டு வாழ்த்து ”

0
69

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் விடுத்துள்ள புத் தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
2018-ஆம் ஆண்டில் உங்களுக்கு புதிய காரியம் நடக்கப் போகிறது.நீங்கள் புதிய ஆசீர்வாதங்களைக் காணப்போகிறீர்கள், உங்களுக்காக புதிய வழிகள் திறக்கப்படப் போகிறது. அதற்காக இந்த ஆண்டு கர்த்தர் உங்களுக்காக கொடுத்த வாக்குத்தத்தம் “இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”. உங்களுக்காகத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த வசனத்தை சொல்கிறார்.
இந்த வாக்குத்தத்தை நீங்கள் விசுவாசித்து அதை உங்களுக்குரிய தென்று நீங்கள் சொந்தமாக்கிக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் புதிய காரியம் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் குடும்பத்தில், உங்கள் வேலையில், உங்கள் வியாபாரத்தில், உங்கள் பிள்ளைகள் காரியத்தில், உங்கள் ஊழியத்தில் புதிய ஆசீர்வாதம் உண்டாகும். புதிய ஆசீர்வாதங்களை நீங்கள் பெற்றுக் கொள்ள புதிய இருதயம் நமக்குள்ளே உருவாக வேண்டும். ஆவிக்குரிய வாழ்க்கை வாழ ஆவியானவர் நம் வாழ்க்கையில் வரவேண்டும்.நம்முடைய சிந்தனை புதிதாகவேண்டும்.புதிய சரீரமாக நம் சரீரத்தை மாற்றவேண்டும். முந்தினவைகளை நினைக்க வேண்டாம்,சிந்திக்கவும் வேண்டாம்.
இந்த ஆண்டு அதிகநேரம் ஆண்டவரின் பாதத்தில் இருந்து ஜெபிக்க,உங்களை அர்ப்பணித் துக் கொண்டால் புதியபெலன் தருவார்.“இதோ நான் சகலத்தையும் புதிதாக்கு கிறேன்” என்று வாக்குக் கொடுத்த கர்த்தர் நம்மை மாத்திரமல்ல, நமது சமுதாயத்தையும், நம்முடைய பட்டணத்தையும்,நம்முடைய கிராமத்தையும், நம்முடைய மாநிலத்தையும், நம்முடைய தேசத்தையும் கர்த்தர் புதிதாக்க விரும்புகிறார். அனைவருக்கும் எனது அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY