நாசரேத்தில் திமுகவினர் கருப்புக்கொடி போராட்டம்!

0
24
திமுக

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசரேத்தில் திமுகவினர் கருப்புக்கொடி போராட்டம்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை
கண்டிக்கும்விதமாக பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து
கருப்புக்கொடி காட்ட ஸ்டாலின், வைகோ உள் ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர்.
இதன்பேரில் இன்று தமிழகம் முழுவதும் திமுக பிரமுகர்களின் வீடு, நிறுவனங்களில்,
இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

திமுக
நாசரேத்தில் திமுக  நகர செயலாளர் அ.ரவி செல்வக்குமார்
தலைமையில் பிரதமர் தமிழகம் வருகையை எதிர்த்து கடைகளில்
கருப்பு கொடியேற்றி, கருப்பு சட்டை அணிந்து, சட்டைகளில் கருப்பு பேட்ஜ்
அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அருண் சாமுவேல் என்ற தம்பு, சந்தி ஆட்டோ ராஜ், திருசெந்தூர் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணித் தலைவர் ஜோசுவா, நகர அவைத் தலைவர் அருள்ராஜ், மாவட்ட பிரதிநிதிகள் சாமுவேல், அன்பு என்ற தங்கபாண்டியன்,நகர மாணவரணி அமைப்பாளர் காட்சன், மூக்குப் பீறி  ஊராட்சி செயலாளர் கலையரசு, நாசரேத் ஜேம்ஸ், ஒன்றிய பிரதிநிதிகள் காந்தி, செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY