மகாராஷ்டிரா விவசாயிகள் பேரணி: தனித்துத் தெரிந்த நது நிவ்ருத்தி உதர்

0
14
மகாராஷ்டிரா

மகராஷ்டிராவில் அம்மாநில விவசாயிகள் மேற்கொண்ட பிரம்மாண்ட பேரணி இந்தியா முழுவதும் மாபெரும் ஆதரவைப் பெற்றனர்.

குறிப்பாக நாசிக்கிலிருந்து மும்பையை நோக்கிய அவர்களது ஆறு நாட்கள் பேரணியில் விவசாயிகள் கொண்டிருந்த தனித்துவமான செயல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கை குறைவுதான். அந்த அளவிற்கு விவசாயிகளின் இந்த ஆக்கபூர்வமான பேரணி அனைவரிடமும் சென்றடைந்ததன் விளைவு அவர்களது கோரிக்கையை மகராஷ்டிரா அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து நாசிக்கில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஆயிரக்கணக்கான விவசாயிகள் மும்பை நோக்கி பிரம்மாண்ட பேரணி தொடங்கினர்.

இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணமாக மும்பை புறப்பட்டனர். வழியில் திறந்தவெளியில் படுத்து உறங்கினர். சூரிய உதயத்துக்கு முன்னர் மீண்டும் மும்பை நோக்கி நடக்கத் தொடங்கினர். இந்தப் பேரணிக்கு அகில இந்திய கிஸான் சபா (ஏஐகேஎஸ்) ஏற்பாடு செய்திருந்தது. இதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.

நாசிக்கில் இருந்து கடந்த 5 நாட்களாக சுமார் 180 கி.மீ. நடை பயணம் செய்து அயர்ந்த கால்களுடன் மும்பையை அடைந்த விவசாயிகளை மலர்கள் தூவி வரவேற்றனர் அந்நகர வாசிகள். உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டிகள், மருத்துவ உதவிகள் என விவசாயிகளின் போராட்டத்தை தங்களது போராட்டமாக அன்பினால் மாற்றி கொண்டனர்.

விவசாயிகளின் இப்பேரணியில் தனித்துவமாக விளங்கிய சிலரைப் புகைப்படங்களாக தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவர்களை பிரபலப்படுத்துவம் நெட்டிசன்கள் தவறவில்லை.

அவ்வாறு நெட்டிசன்களால் பிரபலமடைந்தவர்களில் ஒருவர்தான்  நது நிவ்ருத்தி உதர். தனது போனில் தலையில் வைத்திருந்த சோனார் தகட்டின் மூலம் சார்ஜ் செய்து கொண்டு பேரணியில் பங்கேற்ற விவசாயி.

இந்தியாவின் பல நகரங்களில் இன்னும் ஆரம்ப கட்டப் பணியில் இருக்கும் சூரிய மின்சக்தியை மிக எளிமையாக நம் கண் முன் நிறுத்துனார் நது.

நது மட்டுமல்ல அவருடன் பேரணியில் பங்கெற்ற சிலரும் தங்களது செல்போன்களுக்கு தலையில் வைத்திருந்த சோலார் தகட்டின் மூலம் சார்ஜ் செய்திருந்தனர்.

இதுகுறித்து நது கூறும்போது,  “நான் இந்த சோலார்  தகட்டை என்னுடைய வீட்டிற்காக வாங்கினேன்.  நாங்கள் இந்தப் பேரணியை நடத்த முடிவு பண்ண பிறகு மற்ற விவசாயிகளுக்குப் பயன்படும் என்று கருதி என் தலையில் வைத்துக்கொண்டேன்” என்றார்.

LEAVE A REPLY