தூத்துக்குடி ரோச் பூங்காவில் பாரம்பரிய உணவுத்திருவிழா மார்ச் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறும்

0
28
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த ஊட்டசத்து துறையின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (13.3.2018) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தாவது:
தூத்துக்குடி ரோச் பூங்காவில் வரும் 2324 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பாரம்பரிய உணவுத்திருவிழா தினசரி மாலை 5மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் உணவுத்திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளும் தூத்துக்குடி மாவட்டத்தின் பிரபல உணவு வகையான மக்ரூன் முதலூர் மஸ்கோத் அல்வா கீழஈரல் சேவு கடம்ப10ர் போளி கோவில்பட்டி கடலைமிட்டாய் போன்ற உணவுவகைகள் உணவுத்திருவிழாவிலே தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும். தூத்துக்குடியில் உள்ள பிரபல நட்சத்திர ஒட்டல்களும் இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்று பாரமபரிய உணவு வகைகளை தயாரித்து குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மகளிர்திட்டம் ஊட்டச்சத்து புதுவாழ்வு மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பாரம்பரிய உணவுகள் சிறுதானிய உணவுகள் தயாரித்து வழங்கப்படும்.

தூத்துக்குடி
ரோச் பூங்காவில் பாரம்பரிய உணவுத் திருவிழாவிற்கான 38 ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. இதில் உடல் பரிசோதனை செய்ய மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. சத்துணவுத்துறை மூலம் பல வகையான கலவை சாதம் தயார் செய்யும் முறைகள் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மருத்துவத்தின் மகத்துவம் அறிந்து கொள்கின்ற வகையில் சித்த மருத்துவம் அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இதில் இலவசமாக நிலவேம்பு கசாயம் மற்றும் பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படவுள்ளது. வேளாண்மைத்துறையின் மூலம் சிறுதானியங்கள் காய்கறிகள் பார்iவைக்கு வைக்கப்படவுள்ளது. இவ்விழா சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ் இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன் சார் ஆட்சியர் திரு.எம்.எஸ்.பிரசாந்த் இ.ஆ.ப. உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.எஸ்.சரவணன் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.தியாகராஜன் துணைஆட்சியர் (பயிற்சி) செல்வி.லாவண்யா உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர்.ஜெ.சங்கர் விக்னேஷ் மகளிர் திட்ட அலுவலர் திருமதி.ரேவதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.எஸ்.முத்துலெட்சுமி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திரு.சந்திரமோகன் (மாநகராட்சி) திரு.ராமகிருஷ்ணன் (நகர்புறம்) திரு.சண்முகசுந்தரம் (ஊரகம்) உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY