ஆழ்வார்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

0
13
கண் பரிசோதனை
ஆழ்வார்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேலஆழ்வார்தோப்பு கிராமஉதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண்மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை முகாம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீபராங்குச கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு, கிராம உதயம் கிளைமேலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். தன்னார்வதொண்டர் முத்துராஜ், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனிஅலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். முகாமினை ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பா வெங்கடாச்சாரி துவக்கி வைத்தார்.
முகாமில், சங்கரா கண்மருத்துவமனை மருத்துவக்குழுவினர் டாக்டர்.பூஜா தலைமையில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். முகாமில், ஆழ்வார்தோப்பு, திருக்களூர், நவலெட்சுமிபுரம், பால்குளம், கேம்லாபாத், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, மணல்குண்டு  உட்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். முகாமின் முடிவில் 16பேர் கண்அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண்மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில், இலவச மருத்துவப்பிரிவு துறை பொறுப்பாளர் கண்ணன், மையத்தலைவர்கள் ஆனந்தி, லெட்சுமி, ஆயிஷா மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், தன்னார்வ தொண்டர் ஆறுமுகவடிவு நன்றி கூறினார்.

LEAVE A REPLY