வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

0
11
படப்பிடிப்பு ரத்து

வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்க வேண்டியும் திரையரங்க உரிமையாளர்கள் கடந்த 1-ம் தேதி முதல் எந்த புதுப்படத்தையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் நஷ்டம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக்கின் படி கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடத்தி வருகிறது. இதன் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கியூப் மற்றும் மற்ற பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வு ஏற்படாததால் வருகிற மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” என்று அறிவித்துள்ளது.

இதன் படி அனைத்து படங்களின் படப்பிடிப்பும் வருகிற 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

LEAVE A REPLY