வெப் சீரியலில் நடிக்கிறார் பாபி சிம்ஹா

0
14
பாபி சிம்ஹா

தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹா, புதிதாகத் தொடங்க இருக்கும் தமிழ் வெப் சீரியலில் நடிக்கிறார்.

வில்லன், ஹீரோ என இரண்டு விதமான கேரக்டர்களிலும் நடித்து வருகிறார் பாபி சிம்ஹா. தற்போது அவர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ’சாமி ஸ்கொயர்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன், ‘கம்மர சம்பவம்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதிதாகத் தொடங்க இருக்கும் வெப் சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார் பாபி சிம்ஹா. ‘ஜிகர்தண்டா’ படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டராம் அவருக்கு. பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்த வெப் சீரியலைத் தயாரிக்கின்றனர்.

‘சவாரி’ படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இந்த வெப் சீரியலை இயக்குகிறார். ‘சவாரி’ படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் சீரியல் இது. பிளாக் ஹியூமர் நிறைந்த சீரியலாக இது தயாராகி வருகிறது.

LEAVE A REPLY