தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று (05.03.2018) வெளியிட்டுள்ள அவசர செய்தியில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

0
28
புதிய படங்களை வெளியிடுவதில்லை

கடந்த ஒரு மாத காலமாக நமது திரைத்துறையின் நலன் கருதி தமிழ், தெலுங்கு, மலையாள, மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து digital service provider-க்கு எதிராக மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் வெளியிடுவதில்லை என்று முடிவு எடுத்து நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது இந்நிலையில் இன்று 5.3.2018 ஹைதராபாத்தில் நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் Joint Action Committee-ன் சார்பில் ஏற்கனவே digital service providers க்கு வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

நாம் எதிர்பார்த்த அளவில் சுமூக உடன்படிக்கை ஏற்படாத காரணத்தினாலும், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் நமது தயாரிப்பாளர்களுக்கு இந்த பிரச்சினையில் எந்த வித ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என்ற முடிவினை எடுத்ததாலும், நமது நியாயமான  கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பான புதிய படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும்  என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று மேலும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY