சூர்யாவின் ‘என்.ஜி.கே’வுக்கு என்ன விளக்கம் தெரியுமா?

0
30
என்.ஜி.கே

சூர்யா நடிக்கும் ‘என்.ஜி.கே’ படத்திற்கு என்ன விளக்கம் என்று தெரியவந்துள்ளது.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிவரும் படம் ‘என்.ஜி.கே’. இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. ‘என்.ஜி.கே’ என்றால் என்ன என எல்லோரும் ஆர்வத்துடன் விசாரித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அதற்கான விளக்கம் கிடைத்துள்ளது. ‘நந்த கோபாலன் குமரன்’ என்பதுதான் அது. படத்தில் சூர்யாவின் பெயர்தான் இது என்கிறார்கள்.

‘என்.ஜி.கே’ படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY