நாலுமாவடியில் வியாபாரம், தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம்!

0
68
நாலுமாவடி

நாலுமாவடியில் வியாபாரம், தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர் வாத உபவாச ஜெபம் மார்ச் 17-ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 3 மணி வரை நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம்நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடையக்கூடாரத்தில் வியாபாரம்தொழில் செய்கிறவர்களுக்காக ஆசீர்வாத உபவாசஜெபம் மார்ச் 17-ஆம்தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணிவரை நடைபெறுகிறது. இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடுகின்றனர்.

தொழில்வியாபாரம் ஆசீர்வாதமாய் இருக்கவும்கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட் டுள்ள நஷ்டத்திலிருந்து விடுதலை பெறவும் தொழில் மற்றும் வியாபாரங்களுக்கு விரோதமான மந்திர மற்றும் பில்லிசூனியக் கட்டுகளில் இருந்து விடுதலை பெறவும் தேவ ஆலோசனைகளையும் சிறப்பு ஜெபத்தையும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி.லாசரஸ் உடன் ஊழியர் சகோ. ஏ.அப்பாத்துரை ஆகியோர் ஏறெடுக்கின்றனர்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவனால் ஆசீர்வதிக் கப்பட்டவர்களின் சிறப்பு அனுபவசாட்சிகள் இடம் பெறுகிறது.கடந்த ஆண்டில் சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான தொழில் மற்றும் வியாபாரம் செய்கிறவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.

தொழில்மற்றும்வியாபாரத்தை ஒருநாள் ஒதுக்கிவைத்து விட்டு ஆசீர்வாத உபவாசஜெபத்திற்கு வந்து ஆசீர்வாதம் பெற்றுச்செல்லுமாறு நாலு மாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியக்குழுவினர் கேட்டுள்ளனர்.இந்தக் கூட்டத்திற்கு வரஇயலாதவர்கள் உங்கள் ஜெபவிண்ணப்பங்களை எழுதி மார்ச.17-ஆம் தேதிக்குள் ஆசீர்வாதஉபவாசஜெபம் இயேசு விடுவிக்கிறார் நாலுமாவடி என்றமுகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கூட்டம் முடிந்ததும்; திரும்பிச் செல்வதற்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகி றது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியப்பொதுமேலா ளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY