நாசரேத்-திருவள்ளுவர்காலணி கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை விழா!

0
54
நாசரேத்

நாசரேத்-திருவள்ளுவர்காலணி கிறிஸ்து ஆலய 14-வது பிரதிஷ்டை விழா 5 நாட்கள் நடந்தது. முதல் இரண்டு நாட்கள் ஆலய வளாகத்தில் நற்செய்தி கூட்டங்கள் நடந்தது.வள்ளியூர்-கண்ணநல்லூர் சாமுவேல்தாஸ் தேவசெய்தி வழங்கி னார். நாசரேத் தூதர் தொனி குழுவினர் பாடல்கள் பாடினர்.
3-வது நாள் இரவு 7 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் நற்கருணை ஆராதனை நடந்தது. தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ் தேவ செய்தி வழங்கினார்.
4-வது நாள் மாலை 5 மணிக்கு அசன வைபவம் நிகழ்ச்சி நடந்தது. தூய யோவான் பேராலய உதவிகுரு தனசிங் ஜெபித்து அசன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த அசன விருந்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
5-வது நாள் மாலை 7 மணிக்கு சிறுவர் ஊழிய பேசும் படக்காட்சி நடந்தது.
ஏற்பாடுகளை பேராலய திருப்பணி விடையாளர்கள் எட்வின் ஜெபராஜ், தனசிங், டீக்கன் ஆசா தேவதாஸ், சபை ஊழியர் ஏசா வேதராஜ் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY