இடையன்விளை-நல்லான்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அவதார தின விழா

0
32

நாசரேத். மார்ச். 5
இடையன்விளை- நல்லான்விளையில் நடந்த அய்யாவைகுண்டசாமி பதியில் நடந்த 186-வது அவதார தின விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாசரேத் அருகே உள்ள இடையன்விளை-நல்லான்விளை அய்யாவைகுண்டசாமி பதியில் அய்யாவின் 186-வது அவதார தினவிழாவை முன்னிட்டு மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், 1 மணிக்கு அன்னதானமும் நடந்தது.
அய்யாவின் அருளாளர் ஐயன்சாமி தலைமை வகித்து அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வெள்ளி, ஞாயிறு மதியம் 2 மணிக்கு அய்யாவின் அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அய்யாவின் அருளாளர் ஐயன்சாமி செய்திருந்தார்.

LEAVE A REPLY