திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186வது அவதார தினவிழா நடந்தது.

0
26

தூத்துக்குடி, மார்ச் 4
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 186வது அவதார தினவிழா இன்று(04.03.18)காலை நடந்தது. இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதாரபதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் அய்யா அவதார தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
186வது அவதார தினவிழா இன்றுகாலை நடந்தது. இதை முன்னிட்டு ஏற்கனவே பணிவிடை, உகபடிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மம், பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவிடை, பகல் ஒரு மணிக்கு அன்னதர்மம், மாலையில் பணிவிடை, அய்யா புஷ்பவாகன பவனி ஆகியவை நடந்தது.

அன்றைய தினம் இரவு அவதார தினவிழா நடந்தது. சாமிதோப்பு பால பிரஜாதிபதி அடிகளார் ஆசியுரை வழங்கினார். இரவில் குரு சிவசந்திரர் அய்யாவின் அருளிசை வழிப்பாடு, டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அய்யாவின் அருளிசை வழிப்பாடு நடந்தது.

186வது அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தின் போது கடலில் பதமிடுதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து அவதாரவிழா பணிவிடையும், அன்னதர்மம், இனிமம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட அய்யாவழி திருக்குடும்ப மக்கள் சபையினர் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை அய்யாவழி திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்திருந்தனர்

LEAVE A REPLY