என் கட்சி 3 தலைமுறைக்காவது பயன்பட வேண்டும்: அமெரிக்காவாழ் தமிழர்கள் மத்தியில் கமல்ஹாசன் நம்பிக்கை

0
63

நான் தொடங்க உள்ள கட்சி 3 தலைமுறைக்காவது பயன்படும் சமுதாயக் கருவியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக அமெரிக்காவாழ் தமிழர் கள் மத்தியில் கமல்ஹாசன் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசி வருகிறார். ரஜினியுடன் கூட்டணி அமைப்பதா, இல்லையா என்பது பற்றியும், வரும் 21-ம் தேதி தொடங்க உள்ள கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அதில் பேசி வருகிறார்.

இந்நிலையில், அமெரிக்கா வின் லெக்சிங்டன் நகர் மற்றும் அதைச் சுற்றி தமிழர்கள் வசிக் கும் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:

நான் என் தனிப்பட்ட வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு கடமை செய்ய வந்திருப்பதுபோல, ஒவ்வொரு தமிழரும் நாட்டுக்காக கடமை ஆற்ற தயாராக வேண்டும்.

நான் வெறும் கலைஞனாக மட்டுமே இருந்துவிட்டு இந்த மண்ணைவிட்டு பிரியமாட்டேன். ஏனென்றால், வெறும் கலைஞனாக மட்டுமே இருப்பது எனக்கு போதவில்லை.

நான் தொடங்க உள்ள கட்சி யில் பணியாற்ற யாரும் வரலாம். அதற்காகத்தான் ‘மய்யம்’ என்ற இணையவழியை உருவாக்கியுள்ளேன். அதன் வழியாக கட்சி யின் பெயர், வண்ணம் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் வரும் 21-ம் தேதி இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்த உள்ளேன். அதில் உங்கள் அனைவரது பங்கும் இருக்க வேண்டும்.

நம் எல்லோருக்குமே கடமை இருக்கிறது. இது நீண்ட பயண மாக இருக்க வேண்டும். அது தமிழர்களுக்கான பயனாக இருக்க வேண்டும். அந்த பயனிலும், பயணத்திலும் நானும் நடந்தேன் என்பது எனக்கும் பெருமை.

நான் தொடங்க உள்ள கட்சி 3 தலைமுறைக்காவது பயன்படும் சமுதாயக் கருவியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

இங்கு தமிழ் இருக்கை அமை வது ஹார்வர்டுக்கும் பெருமை. தமிழர்களுக்கும் பெருமை. இரு தரப்பினரும் அதை பெருமையாக நினைக்க வேண்டும்.

ராமேசுவரத்தில் தொடங்கி அடுத்தடுத்து செயல்பட உள்ள அரசியல் பணிகளில், மதுரைக்கு வந்து சில செயல்பாடுகள் குறித்து பேச உள்ளேன். அதில் கல்வித் தரத்தை உயர்த்துவது, எளிய வழியில் மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்கச் செய்வது என்பது குறித்தும் பேச உள்ளேன். அதையும் 5 ஆண்டு கால திட்டமாக அறிவிக்க உள்ளேன்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறி னார்.

LEAVE A REPLY