நாசரேத் பேரூராட்சி கீழத்தெருவில் ரோட்டில் செல்லும் கழிவு நீர்! செயல்அலுவலரின் அதிரடிநடவடிக்கையினால் கழிவுநீர்ஓட்டை அடைப்பு!!

0
38

 

நாசரேத் கீழத்தெருவில் ரோட்டில் செல்லும் கழிவு நீரால் தொற்றுநோய் ஏற்படும்அபாயம் உள்ளது குறித்து அப்பகுதி மக்கள் உட னடியாக நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி நிர்வாகத்திற்கு; கோரிக்கை விடுத்திருந்தனர்.இதனை பார்வையிட்ட செயல்அலுவலர் வீட்டின் உரிமை யாளருக்கு எச்சரிக்கை விடுத்ததின் எதிரொலியால் சாக்கடை தண்ணீர் ரோட்டில் செல்வது அடைக்கப்;பட்டது.
நாசரேத் பேரூராட்சி கீழத்தெரு மேற்குபகுதியில் உள்ள லைன்வீட்டில் உள்ள கழிவு நீரை லைன் வீட்டின் காம்பவுண்டில் துளையிட்டு ரோட்டில் செல்லுமாறுவிடுவதால் துர்நாற்றம் வீசுவதோடுமட்டுமில்லாமல்அருகிலுள்ள வீடுகளின்முன்பு தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது என்றும் இவ்வழியாக பள்ளி செல்லும் மாணவ மாணவி கள் முதல் பெரியவர்கள் வரையிலும் இரண்டு சக்கர நான்கு சக்கர வாக னங்களில் கழிவுநீர் படுவதால

அந்த தெருவையே பொது மக்கள் பயன் படுத்த முடியாத அளவிற்கு மிகவும்மோசமாக காட்சியளிக்கிறது என்றும் இதனால் காம்பவுண்டிலிருந்து துளையிட்டு ரோட்டோரம் விடப்படும் கழிவு நீரை நிறுத்த காம்பவுண்டு துளையை நிரந்தரமாக அடைத்து இப்பகுதி மக்களை தொற்றுநோய்களில் இருந்து காப்பாற்றும்படி பேரூராட்சி செயல் அலுவலருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதுகுறித்து உடனடியாக பேரூராட்சி செயல் அலுவலர் கே.ஆர்.பி.மணி மொழி செல்வன் ரெங்கசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டு குறிப்பிட்ட தினங்களுக்குள் கழிவு நீர் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ள ஓட்டையை அடைக்காவிட்டால் வீட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதினால் உடனடியாக கழிவு நீர் செல்ல பயன்படுத்தப்பட்டுள்ள காம்பவுண்டு துளையை வீட்டின் உரிமை யாளர் அடைத்துள்ளார்.இச்செயலில் செயல் அலுவலர் உடனடியாக தலையிட்டு அதிரடியாக நடவடிக்கை எடுத்ததை இப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.

LEAVE A REPLY