எரிவாயு உருளைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

0
4

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.796.50/- ஆகவும் கோவில்பட்டியில் ரூ.795/- ஆகவும் கழுகுமலையில் ரூ.802.50/- ஆகவும்  கயத்தாரில் ரூ.798/- ஆகவும் எட்டையபுரத்தில் ரூ.795/- ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.811.50/- எனவும் பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.796.50ஃ- எனவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.709.34ஃ- எனவும் 01.02.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 முப ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY