தமிழர்களை பார்த்து கழுத்தினை அறுத்துவிடுவதாக மிரட்டிய இலங்கை பிரிகேடியரை நாடு கடத்த இந்தியரசு குரல் கொடுக்க வேண்டும் – வைகோ

0
75

கோவில்பட்டியில் மதிமுக பொது செயலாளர் வைகோ தனது உதவியாளர் சந்துரூவின் சகோதிரி வீடு கிரஹபிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு அளித்த பேட்டி இலங்கை தமிழர்கள் இனபடுகொலைக்கு காரணமான சிங்கள, கொலைகார அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தி இனப்படுகொலைக்கு தண்டிக்க வேண்டும் என்றும், சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும் என்றும், லட்சக்கணக்கான தமிழகர்களின் படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும் உலகரங்கில் குரல் எழுப்பிக்கொண்டு இருக்கும் இந்தந நிலையில் லண்டனில் கடந்த 4 தேதி இலங்கை சுதந்திரதினத்தன்று, இனப்படுகொலைக்கு நீதி கேட்டு,; இலங்கை தூதரகத்தற்கு எதிரே லண்டனில் வாழக்கூடிய ஈழத்தமிழர்கள் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அப்போது தூதுவரோடு வெளியே வந்த பிரிகேடியர் ப்ரியங்காப்ரணப் கழுத்தை அறுப்பேன் என்று தமிழர்களை பார்த்து தனது கையினால் சைகை மூலம் சொல்லியுள்ளார். இதற்கு பிரிட்டிஷ் பார்லிமெண்டில் அங்குள்ள எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து அவரது விசாவை பறித்து, நாடுகடத்த வேண்டும் என்று பார்லிமெண்டில் பிரச்சினையை கிளப்பியுள்ளனர். ராஜபக்சே லண்டன் சென்ற போது வெளியே வரவிடமால் பல்லாயிரகணக்கான தமிழர்கள் திரண்டு விரட்டினார்கள். இந்த கட்டத்தில் லண்டனில் உள்ள எம்.பிக்கள் குரல் கொடுத்துள்ள ஆறுதல் தருகிறது. தமிழர்களை மிரட்டிய பிரிகேடியரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்தியரசு குரல் கொடுக்க வேண்டும். ஆனால் குரல் கொடுக்காது.நரேந்திர மோடி அரசு எல்லா விதத்திலும் சிங்கள அரசுககு உதவியாக இருந்து கொண்டு,நம்முடைய மீனவர்கள் எல்லையை தாண்டினால் என்று கூறி கோடிக்கணக்கான ரூபாய் அபாரதம் 3 ஆண்டு சிறை என்ற ஆக்கிரமான சட்டத்தினை நிறைவேற்றியுள்ளது .இந்தியரசு கண்டிக்கவில்லை.லண்டனில் உள்ள பிரிகேடியரை அனுப்புவதற்கு உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும், பிரிட்டிஷ் அரசு அவரை வெளியேற்ற வேண்டும் வலியுறுத்து மட்டுமின்றி இந்தியரசுக்கு தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் கண்டனம் தெரிவிக்க வேண்டும், மக்களின் தலையில் ஏற்கனNவு பஸ் கட்டண உயர்ந்து, 100சதவீதம் உயர்த்தப்பட்டு, பொதுமக்கள் தலைiயில் கல்லை போடுவது போல, அண்ணாதிமுக அரசு மக்கள் விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. திமுக தலைமையில் கட்டண உயர்வினை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு 6லட்சத்திற்கு மேல் கைது செய்யப்பட்டு, அடைத்து வைக்க சிறைகள் இல்லாத காணரத்தினால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இந்த அரசுக்கு மக்கள் கொந்தளிப்பு இப்படி இருக்கிறது என்ற எண்ணமோ,கட்டணத்தினை குறைக்க வேண்டும் என்ற நோக்கமோ இல்லை, அதற்கு மாறாக கூட்டுகின்ற வேலையாக தான் இருக்கின்றனர். இந்த நேரத்தில் அடிமேல் அடியாக கோவில்பட்டியில் சொத்து வரியை இவர்களவே, தற்போது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லாத போது, வரியை அதிகாரித்து சென்று வசூலிப்பதை மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து கண்டன போர்டுகள், தெருமுனைக்கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். உயர்த்தப்பட்ட வரி வசூலிக்க கூடாது, வசூல் செய்தததை திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகரமேஸ், கோவில்பட்டி நகர செயலாளர் பால்ராஜ், மாநில விவசாய அணி இணை செயலாளர் வரதராஜன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சரவணன், முன்னாள் யூனியன் சேர்மன் கணேசன் உள்டப பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY