திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நாளை (31ம் தேதி) நடக்கிறது.

0
45

திருச்செந்தூர், ஜன. 30
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நாளி (31ம் தேதி) நடக்கிறது. தைப்பூச திருநாளில் சந்திரகிரகணமும் ஏற்படுவதால் பூஜைகள் மாற்றப்பட்டுள்ளன. தைப்பூசத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக குவிந்துள்ளனர்.


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு முக்கிய விழாக்கள் நடக்கிறது. இதில் தைபூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதையொட்டி நாளை (31ம் தேதி) அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், அதனை தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. காலை 7 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், அதனை தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது.
பின்னர் மாலை 5.16 மணியிலிருந்து 8.50 மணி வரை சந்திரகிரகணம் ஏற்படுவதால், சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தைப்பூச மண்டபத்தை வந்து சேருகிறார். இங்கு உபயதாரர் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் 4 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரதில் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்து சேருகிறார். சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 4.15 மணிக்கு மூலவருக்கு பட்டுச்சாத்தி நடைசாத்தப்படுகிறது. பின்னர் சந்திர கிரகணம் முடிந்த பின்னர் இரவு 9.30 மணிக்கு கோயில் நடைதிறக்கப்ப்பட்டு மீண்டும் பூஜை காலங்கள் நடக்கிறது.
தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து முருகப்பக்தர்கள் பச்சை நிற ஆடையணிந்து பாத யாத்தி¬ராக திருச்செந்தூக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மார்க்க சாலைகளில் ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் முருக பாடல்களை பாடி அலகு குத்தியும், காவடி எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோயில் வளாகத்தில் முருகபக்தர்களின் கூட்டம் திரண்டு காணப்படுகிறது.

இதையொட்டி கோயில் வளாகம் கோலாகலமாக காட்சியளிக்கிறது. இந்த பக்தர்கள் காவடி எடுத்தும், வேல் குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் மற்றும் இணை ஆணையர் பாரதி ஆகியோர் செய்துள்ளனர்.

LEAVE A REPLY